Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தொடருமா?...29-ந் தேதி முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தொடருமா?...29-ந் தேதி முதல்வர் ஆலோசனை

By: Monisha Tue, 25 Aug 2020 09:35:09 AM

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தொடருமா?...29-ந் தேதி முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்கான பொது போக்குவரத்து கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் இ-பாஸ் பெற்று வேறு மாவட்டங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த உத்தரவு கடந்த 17-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், 'மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாத வகையில் இ-பாஸ் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

e pass,corona virus,consulting,edappadi palanisamy,collector ,இ பாஸ்,கொரோனா வைரஸ்,ஆலோசனை,எடப்பாடி பழனிசாமி,கலெக்டர்

இதனையடுத்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முடியுமா? என்பது பற்றி முடிவெடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் 29-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது பற்றிய அறிவிப்பை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|