Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்படுமா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்படுமா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்

By: vaithegi Thu, 13 July 2023 11:29:32 AM

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்படுமா?  அமைச்சர் முத்துசாமி விளக்கம்

சென்னை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் செய்யப்படாது ...தமிழகத்தில் இயங்கி கொண்டு வரும் 5000க்கும் மேற்பட்ட மது கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து அதன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 500 மது கடைகள் மூடப்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்படும் என்றும் தகவல் வெளியானது. அதாவது டாஸ்மாக் கடைகள் இனி காலை நேரத்தில் சேர்க்கப்படும் என்று தகவல்கள் வெளியானது.

minister muthuswamy,tasmac shops , அமைச்சர் முத்துசாமி ,டாஸ்மாக் கடைகள்

இதனை அடுத்து இதற்கு பொது மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. எனவே இது தொடர்பாக பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்படாது வழக்கம் போல கடைகள் திறக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து உள்ளார்.

மேலும் தமிழகத்தில் கோயில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்யவும் முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags :