Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பில் தாமதம் இருக்குமா? அமைச்சர் விளக்கம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பில் தாமதம் இருக்குமா? அமைச்சர் விளக்கம்

By: vaithegi Sat, 22 Apr 2023 4:40:13 PM

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பில் தாமதம் இருக்குமா? அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் தற்போது வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்தாண்டு விட நடப்பு ஆண்டு வெப்பநிலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் பல உடல் நல கோளாறுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதையடுத்து இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து பள்ளி ஆண்டு தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

minister,summer vacation ,அமைச்சர் ,கோடை விடுமுறை

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் கோடை வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா? என கேள்வி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று சென்னை சைதாப்பேட்டையில் JEE, NEET உள்ளிட்ட தேர்வுக்கான பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்த பயிற்சி திட்டத்தில் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது உள்ள வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்க இயலாது என அவர் கூறினார்.

Tags :