Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் இன்று முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை

டெல்லியில் இன்று முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை

By: vaithegi Thu, 09 Nov 2023 11:35:53 AM

டெல்லியில் இன்று முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை

புது டெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னதாக, டெல்லியில் காற்று மாசு காரணமாக நவம்பர் 11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இன்று முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

winter vacation,delhi ,குளிர்கால விடுமுறை ,டெல்லி

டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை, முன்கூட்டியே அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் அடிப்படையில் வரும் நவம்பர் 13 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இடையில், டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதியை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags :