Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

By: vaithegi Mon, 06 Nov 2023 1:59:02 PM

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?


சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின்பு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் வரையிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து இத்தொடர் விடுமுறை காரணத்தினால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

இதனால், வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பள்ளிமாணவர்களுக்கான விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


diwali,holiday,school ,தீபாவளி ,விடுமுறை,பள்ளி

மேலும், தீபாவளி விடுமுறை முடிவடைந்த பிறகு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை விடப்படும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளி விடுமுறை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags :
|