Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக பாரம்பரிய தளமான இட்சுகுஷிமா ஆலயத்தை பார்வையிட்ட ஜி 7 நாடு தலைவர்களின் மனைவிகள்

உலக பாரம்பரிய தளமான இட்சுகுஷிமா ஆலயத்தை பார்வையிட்ட ஜி 7 நாடு தலைவர்களின் மனைவிகள்

By: Nagaraj Sun, 21 May 2023 07:04:28 AM

உலக பாரம்பரிய தளமான இட்சுகுஷிமா ஆலயத்தை பார்வையிட்ட ஜி 7 நாடு தலைவர்களின் மனைவிகள்

ஹிரோஷிமா: ஆலயத்தை பார்வையிட்டனர்... ஹிரோஷிமாவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்காக சென்றுள்ள ஜி7 நாடுகள் தலைவர்களின் துணைவியர்கள், உலக பாரம்பரிய தளமான இட்சுகுஷிமா ஆலயத்தை பார்வையிட்டனர்.

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன், பிரிட்டன் பிரதமர் மனைவி அக்ஷதா மூர்த்தி, ஜெர்மனி அதிபர் மனைவி பிரிட்டா உள்ளிட்டோருக்கு இட்சுகுஷிமா ஆலயத்தில் ஜப்பானிய நடன நிகழ்ச்சியுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள லைவ் கவுண்டரில் ஹிரோஷிமா பாணியில் ஒகோனோமியாகி என்ற உணவு சமைக்கப்பட்டதை நேரில் கண்டு ரசித்த அவர்கள், ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

global issues,consultation,ukraine war,summit ,உலகளாவிய பிரச்னை, ஆலோசனை, உக்ரைன் போர், உச்சி மாநாடு

இதற்கிடையில் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான அறிக்கையில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இரண்டு நாள் ஜி7 உச்சி மாநாட்டில், உக்ரைன் போர் மற்றும் பிற உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :