Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ’கிராண்ட் கேன்யன்' பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

’கிராண்ட் கேன்யன்' பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

By: Karunakaran Mon, 06 July 2020 10:30:47 AM

’கிராண்ட் கேன்யன்' பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

உலகின் மிகவும் பிரபலமான செங்குத்துப்பள்ளத்தாக்கான ’கிராண்ட் கேன்யன்’ அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ளது. இது பாறைகளும், உயரமான, கரடுமுடடான மலை உச்சிகளையும் கொண்டது. சுற்றுலா தளமாக திகழ்ந்து வரும் இங்கு சுற்றுலா பயணிகள் பலர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவர்.

பலவிதமான அடுக்குகளையும், பல அடி ஆழத்தையும் கொண்ட இந்த செங்குத்து பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முயன்ற பல சுற்றுலா பயணிகள் தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரிசோனா பகுதியை சேர்ந்த மரியா என்ற 59 வயது நிரம்பிய பெண் கடந்த சனிக்கிழமை ’கிராண்ட் கேன்யன்’ பகுதியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

grand canyon,woman die,photograph,valley ,கிராண்ட் கேன்யன், பெண் இறப்பு, புகைப்படம், பள்ளத்தாக்கு

குடும்பத்தினருடன் விடுமுறை தினத்தை கொண்டாட ’கிராண்ட் கேன்யன்’ பகுதிக்கு சென்ற மரியா, அங்குள்ள மதர் சந்திப்பு பகுதியில் அவர் குடும்பத்தினருடன் பல புகைப்படங்களை எடுத்துள்ளார். தனியாக நின்று புகைப்படம் எடுக்க விரும்பிய அவர் அங்கு மலை முகட்டின் உச்சியில் நின்றுகொண்டு புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது தடுமாறிய அவர் சுமார் 100 அடி செங்குத்து பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் அங்கு வந்த மீட்பு படையினர் நீண்ட தேடுதலுக்கு பின் அவரது உடலை கைப்பற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags :