Advertisement

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஹோட்டலில் தற்கொலை

By: Monisha Fri, 28 Aug 2020 12:39:53 PM

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஹோட்டலில் தற்கொலை

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் லண்டனில் இருந்து மனோன்மணி என்ற கோவையைச் சேர்ந்த 47 வயது பெண் சென்னைக்கு வந்தார். இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவ்வப்போது லண்டனில் உள்ள தனது மகளிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்போது இந்த ஹோட்டலில் தங்குவதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

suicide,london,chennai,isolation,investigation ,தற்கொலை,லண்டன்,சென்னை,தனிமைப்படுத்தல்,விசாரணை

இந்த நிலையில் நேற்று லண்டனில் உள்ள மகள் தனது தாயாருக்கு மொபைல் போனில் பேசுவதற்காக தொடர்பு கொண்டார். ஆனால் மனோன்மணி போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களிடம் கூறி உடனே ஓட்டலில் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். உறவினர்கள் ஹோட்டலில் சென்று பார்த்தபோது மனோன்மணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் மனோன்மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தும் காலத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த இருவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலிலும், கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|