Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 56 ஆண்டுகளுக்கு பின்னர் நூலகத்தின் புத்தகத்தை திருப்பிக் கொடுத்த பெண்

56 ஆண்டுகளுக்கு பின்னர் நூலகத்தின் புத்தகத்தை திருப்பிக் கொடுத்த பெண்

By: Nagaraj Sat, 11 Feb 2023 08:46:10 AM

56 ஆண்டுகளுக்கு பின்னர் நூலகத்தின் புத்தகத்தை திருப்பிக் கொடுத்த பெண்

இங்கிலாந்து: 56 ஆண்டுகளுக்கு பின் திருப்பி கொடுத்தார்... இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 56 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திலிருந்து படிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.

லெஸ்லி ஹாரிஸன் என்பவருக்கு இப்போது 70 வயதாகிறது. இவர், தனக்கு 14 வயதானபோது, அதாவது, 1966 ஆம் ஆண்டு விட்லே பே கிராமர் பள்ளியில் படித்தபோது “இச் லெர்ன் டச்” (டச்சு மொழியை கற்றுக்கொள்ளுங்கள்) என்னும் புத்தகத்தை படிப்பதற்காக நூலகத்திலிருந்து எடுத்து வந்தார்.

அந்த புத்தகத்தின் முதல்பக்கத்தில் இருந்த சிறு குறிப்பில் 21 நாட்களுக்குள் புத்தகத்தை படித்துவிட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஒரு வாரத்திற்கு மூன்று பென்னிகள் (பென்னி-இங்கிலாந்து நாணயம்) அபராதம் செலுத்த வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“நான் விட்லே பே கிராமர் பள்ளியில் படித்தபோது இந்த புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன். அந்த பள்ளியில் ஏ லெவல் ஜெர்மன் படித்தேன். அடுத்து பிரெஞ்சு படித்தேன். அதன் பிறகு ஸ்பானிஷ் மொழி படிக்கவும் நினைத்தேன். ஆனால், இப்போது 70 வயதில் எனக்கு ஜெர்மன் மொழி மறந்து போய்விட்டது.

புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் பள்ளியில் படித்துவிட்டு பெற்றோருடன் மீண்டும் சேர்ந்த போது அந்த புத்தகத்தையும் எடுத்துச் சென்றுவிட்டேன். அபராதத்தையும் செலுத்த முடியவில்லை. புத்தகத்தையும் திருப்பிதர முடியவில்லை. அடுத்தடுத்து வீடு மாறியதால் அந்த புத்தகமும் என்னுடனேயே இருந்துவந்தது. வீட்டில் மேஜை டிராயரில் வைத்தது அப்படியே இருந்தது.

56 years,book,library,returned,old book ,56 ஆண்டுகள், புத்தகம், நூலகம், திருப்பி கொடுத்தார், பழைய புத்தகம்

இந்த நிலையில் நான் புத்தகத்தை எடுத்துவந்த கில்லிங்வொர்த் நூலகம் ஒர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், “நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துச் சென்றவர்கள் எவராது புத்தகத்தை திருப்பிக் கொடுத்தால் அவர்கள் அபராதம் ஏதும் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு நாங்கள் பரிசு தருகிறோம்” என்று தெரிவித்திருந்தது.

இதை கேள்விப்பட்டதும் என்னிடம் நூலகத்திலிருந்து எடுத்துவந்த புத்தகம் இருப்பது நினைவுக்கு வந்தது. அந்த புத்தகத்தை நான் நூலகரிடம் திருப்பிக் கொடுத்த போது அவர் அதிர்ச்சியமும் அதிர்ச்சியும் அடைந்தார். ஏனெனில் நான் திருப்பிக் கொடுத்த புத்தகம் மெருகு குலையாமல் புத்தம் புதிதாக இருந்ததுதான் என்கிறார் லெஸ்ஸி ஹாரிஸன்.

இதுபற்றி நூலகத்தின் அதிகாரிகளில் ஒருவரான சாண்டார கிரஹாம் கூறுகையில், “56 ஆண்டு காலம் புத்தகத்தை திருப்பித்தராமல் வைத்திருந்ததற்காக அந்த பெண் 2,000 யூரோக்களுக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், நாங்கள் பழைய புத்தகங்களை திருப்பிக் கொடுத்தால் அபராதம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிப்பு வெளியிட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

காலதாமதம் ஆனாலும் இந்த புத்தகம் திரும்ப கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். இனி இந்த புத்தகம் நூலக காப்பகத்தில் பத்திரமாக இருக்கும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags :
|