Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதாள சாக்கடை திறந்திருப்பதை எச்சரிக்க பல மணிநேரம் சாலையில் நின்ற பெண்

பாதாள சாக்கடை திறந்திருப்பதை எச்சரிக்க பல மணிநேரம் சாலையில் நின்ற பெண்

By: Nagaraj Sat, 08 Aug 2020 4:48:37 PM

பாதாள சாக்கடை திறந்திருப்பதை எச்சரிக்க பல மணிநேரம் சாலையில் நின்ற பெண்

தன்னலம் கருதாது சேவை செய்த பெண்... பாதாள சாக்கடை திறந்திருப்பதை எச்சரிப்பதற்காக மணிக்கணக்கில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் நின்றுகொண்டுள்ளார் மும்பையை சேர்ந்த பெண்.

மும்பையில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்துவருகிறது. தொடர்மழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், தெற்கு மும்பை பகுதியில் உள்ள சாலை ஒன்றில் கனமழை காரணமாக பாதாள சாக்கடை ஒன்று திறந்துள்ளது. மேலும், சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் சாக்கடை திறந்திருப்பது மறைந்துள்ளது.

sewer,mumbai,woman,flood,warning ,பாதாள சாக்கடை, மும்பை, பெண், வெள்ளம், எச்சரிக்கை

இதனை அடுத்து, பாதாள சாக்கடை திறந்திருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் அந்த பாதாளசாக்கடையின் அருகில் நின்றுகொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து அந்த இடத்தில் நின்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தவாறு இருந்துள்ளார். அதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும், "சுயநலம் பாராமல் மழையில் இதுபோன்று நின்று மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்" எனவும் பதிவிட்டுள்ளனர்.

திறந்த சாக்கடையில் விழுந்து மரணிப்பது மும்பையில் அடிக்கடி நிகழும் சம்பவம். 2019 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதாள சாக்கடையில் விழுந்தும் கடலில் மூழ்கியும் 328 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|
|
|