Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 24ம் தேதி முதல் சென்னையில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்

வரும் 24ம் தேதி முதல் சென்னையில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்

By: Nagaraj Thu, 13 July 2023 8:06:02 PM

வரும் 24ம் தேதி முதல் சென்னையில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்

சென்னை: மகளிர் உரிமைத் திட்டத்துக்குத் தகுதியான குடும்பத் தலைவிகளைக் கண்டறியும் முகாம் வரும் 24ம் தேதி முதல் சென்னையில் தொடங்கும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்குத் தகுதியான குடும்பத் தலைவிகளைக் கண்டறியும் முகாம் ஜூலை 24 முதல் சென்னையில் தொடங்கும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

அதன்படி, 3523 முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன. பள்ளிக் கூடங்கள், சமூக நலக் கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு தங்குமிடங்கள் என முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பயனாளிகளின் விவரங்கள் தன்னார்வலர்களால் பயோமெட்ரிக் முறையில் சேகரிக்கப்படும்.

camp,chennai,date,entitlement amount,female,july 24,mayor,priya , உரிமைத் தொகை, சென்னை, ஜூலை 24, தேதி, பிரியா, மகளிர், முகாம், மேயர்

மேலும், முகாம்களில் பயனாளிகளின் விவரங்களை சேகரிக்க பணியாளர்கள், முகாம்களில் பணிபுரியும் பொறுப்பு அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோரும் நியமிக்கப்படுவர். இதனிடையே, இத்திட்டம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி, தேதி வாரியாக தெருக்கள் பிரித்து விண்ணப்பங்களை வீடு வீடாக விநியோகம் செய்யவும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பங்கள் சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|