Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியும் வேலைகள் தொடக்கம்

மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியும் வேலைகள் தொடக்கம்

By: vaithegi Wed, 26 Apr 2023 12:31:55 PM

மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியும் வேலைகள் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில், டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து படிப்படியாக குறைப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அந்தவகையில், சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையில் பேசிய அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்கள்

tasmac,liquor store ,டாஸ்மாக் ,மதுபானக்கடை

‘‘தமிழகத்தில் 5329 மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் தகுதியான 500 மதுபானக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்’’ என்று அவர் அறிவித்தார். இந்த நிலையில், 500 கடைகளை குறைப்பதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக, 50 மீட்டர் இடைவெளியில் இருக்கும் கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளி, கோயில்கள் அருகில் மக்களால் அகற்றப்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடைகள் கண்டறியும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tags :
|