Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி குறித்த இங்கிலாந்து முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு

கொரோனா தடுப்பூசி குறித்த இங்கிலாந்து முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு

By: Nagaraj Fri, 25 Sept 2020 11:58:56 AM

கொரோனா தடுப்பூசி குறித்த இங்கிலாந்து முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு

உலக நாடுகள் வரவேற்பு... கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முதல்கட்ட முயற்சியில் இங்கிலாந்து இறங்கியுள்ளதற்கு உலக நாடுகள் தமது வரவேற்பை அளித்துள்ளன.

லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை சோதனை செய்து பார்க்கவும் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்தால் அதை சோதனை செய்வதற்கு அந்நாட்டில் உள்ள மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

countries of the world,uk,welcome,corona vaccine ,உலக நாடுகள், இங்கிலாந்து, வரவேற்பு, கொரோனா தடுப்பூசி


இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாதித்துள்ள நோயாளிகளுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தும் சவாலான சோதனையை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இந்த சோதனைக்காக இங்கிலாந்தில் சுமார் 2000 கொரோனா நோய் தாக்கிய தன்னார்வலர்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு உள்ளனர். இந்த சோதனை 2021 ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|