Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு செக் வைக்க கை கோர்க்கும் உலக நாடுகள்

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு செக் வைக்க கை கோர்க்கும் உலக நாடுகள்

By: Nagaraj Mon, 18 May 2020 8:20:47 PM

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு செக் வைக்க கை கோர்க்கும் உலக நாடுகள்

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு செக் வைக்க உலக நாடுகள் ஒன்றாக கை கோர்க்கின்றன. உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டம் காணச் செய்து வருகிறது. கொரோனா நோய் தொற்றை சீனா திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

china,world countries,corona,india,japan,ref ,சீனா, உலக நாடுகள், கொரோனா, இந்தியா, ஜப்பான், மறுப்பு

சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அங்குள்ள கடல்சார் உணவுகள் விற்பனை சந்தையின் மூலம் பரப்பப்பட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது. ஆனால், சீனா இதனை மறுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவுவதற்கு யார் காரணம்..? என்பதை கண்டறிய, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆஸ்திரேலியாவும், ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து கொண்டு வரும் இந்த தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான் உள்பட 62 நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|