Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா...உயிரிழப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா...உயிரிழப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது

By: Monisha Sat, 22 Aug 2020 09:33:07 AM

உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா...உயிரிழப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 649 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 5 ஆயிரத்து 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

corona virus,infection,death,treatment,world ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,உலகம்

கொரோனாவில் இருந்து 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 2 ஆயிரத்து 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் விபரம் வருமாறு:-

அமெரிக்கா - 1,79,153
பிரேசில் - 1,13,454
மெக்சிகோ - 59,106
இந்தியா - 54,849
இங்கிலாந்து - 41,405
இத்தாலி - 35,427
பிரான்ஸ் - 30,503
ஸ்பெயின் - 28,838
பெரு - 27,034
ஈரான் - 20,376

Tags :
|