Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

By: Karunakaran Sat, 20 June 2020 11:09:04 AM

உலகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதற்கான முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 87 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 36 லட்சத்து 57 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 46 லட்சத்து 16 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

who,corona infection,worldwide,tetros adenam,coronavirus ,கொரோனா பாதிப்பு, உலக சுகாதார அமைப்பு,டெட்ரோஸ் ஆதனாம்,கொரோனா வைரஸ்

தற்போது கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதாகவும், கடந்த வியாழக்கிழமை மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது கொரோனா பரவிய நாள் முதல் ஒரே நாளில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் அதிகபட்ச ஒருநாள் எண்ணிக்கை ஆகும்.

மேலும் இதில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், உலகம் தற்போது புதிய மற்றும் ஆபத்தான பகுதியில் உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தற்போதும் வேகமாக பரவி வருவதால், அது இன்னும் மிக கொடூரமாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|