Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக சுகாதார அமைப்பான WHN குரங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பான WHN குரங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவிப்பு

By: vaithegi Sat, 25 June 2022 6:56:27 PM

உலக சுகாதார அமைப்பான WHN குரங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவிப்பு

இந்தியா: உலகளவில் குரங்கு காய்ச்சல் என்ற புதிய நோய் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் உலகளவில் சுமார் 58 நாடுகளில் 3,417 உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHN) தற்போது குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றில் பெரியம்மை நோயை விட இறப்பு விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், இதன் பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் பலர் பார்வையற்றவர்களாகவும், ஊனமுற்றவர்களாகவும் மாறுவார்கள் என்றும் WHO எச்சரித்துள்ளது.

இப்போது இந்த நோய்த்தொற்றின் வெடிப்பு பல கண்டங்களில் வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை இல்லாமல் இது நிறுத்தப்படாது என்றும் இது குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நியூ இங்கிலாந்து காம்ப்ளக்ஸ் சிஸ்டம் இன்ஸ்டிட்யூட்டின் தலைவரும் WHNன் இணை நிறுவனருமான யானீர் பார்-யாம் கூறுகையில், ‘குரங்கு நோய் தொற்று மேலும் வளரும் வரை காத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இது தான், நாம் அனைவரும் உடனடி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், குறைந்த முயற்சியில் வெடிப்பை கட்டுப்படுத்தலாம். மேலும் விளைவுகளை மோசமாக்குவதை தடுக்கலாம்.

monkey fever,infection ,குரங்கு காய்ச்சல், தொற்றுநோய்

இந்த குரங்கு மற்றும் பெரியம்மை ஆகியவை ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் எனப்படும் ஒரே வைரஸ் குடும்பத்திலிருந்து வந்தவை. குரங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது விலங்குகளில் தோன்றி மக்களுக்கு பரவுகிறது. இந்த நோய்த்தொற்று முதலில் ஆப்பிரிக்காவில் காணப்பட்டது. தவிர, பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளை சுற்றி உள்ளது.

ஆனால் இப்போது உலகம் முழுவதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இந்த நோய்த்தொற்று காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் முனைகளுடன் வெளிப்படுகிறது.

இது பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். குரங்கு பாக்ஸ் பொதுவாக 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளை கொண்ட ஒரு சுய-வரம்பிற்குட்பட்ட நோயாகும். இப்போது, உடல் தொடர்பு அதாவது பாதிக்கப்பட்ட நபரைத் தொடுதல், குறிப்பாக சொறி பாதிப்புள்ளவரை தொடுதல், அசுத்தமான ஆடைகள், படுக்கை மற்றும் அதில் இருக்கும் பொருட்களுடன் தொடர்பு வைத்தல், காற்றில் உள்ள துகள்களை சுவாசிப்பது மற்றும் மனிதர்களுடன் நெருங்கிய உறவில் இருத்தல் ஆகியவை குரங்கு தொற்றுநோய் பரவுவதற்கான பல்வேறு வழிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் உலக சுகாதார அமைப்பான WHN குரங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவித்துள்ளது.

Tags :