Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரங்கு அம்மை வைரஸ் உருமாற்றத்திற்கு கிளேட் 1,கிளேட் 2 உலக சுகாதார அமைப்பு புதிய பெயர் சூட்டியுள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் உருமாற்றத்திற்கு கிளேட் 1,கிளேட் 2 உலக சுகாதார அமைப்பு புதிய பெயர் சூட்டியுள்ளது.

By: vaithegi Sun, 14 Aug 2022 1:25:00 PM

குரங்கு அம்மை வைரஸ் உருமாற்றத்திற்கு கிளேட் 1,கிளேட் 2 உலக சுகாதார அமைப்பு புதிய பெயர் சூட்டியுள்ளது.

இந்தியா : கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நடவடிக்கைபணிகளால் தான் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அடுத்த தாக்குதலாக குரங்கு அம்மை வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது.


மேலும் குரங்கு அம்மை வைரஸானது முதல் முறையாக மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அதே சமயம் இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

monkey measles,virus ,குரங்கு அம்மை, வைரஸ்

இந்நிலையில் ஆப்ரிக்காவை தொடர்ந்து குரங்கு அம்மை இதுவரை 89 நாடுகளில் 27 ஆயிரத்து 814 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது. மேலும் குரங்கு அம்மை வைரஸ் கொரோனா வைரஸை போல மாறுபாடு அடைந்து வருகிறது.இதற்கு சுகாதார அமைப்பு புதிய பெயர் சூட்டி வருகிறது.

இதனால் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதே போன்று கிளேட்-2 வைரஸ், 2 துணை வைரஸ்களை கொண்டுள்ளது. அவைகளுக்கு கிளேட் 2-ஏ, கிளேட் 2-பி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் உலகளாவிய நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து சூட்டப்பட்டு இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .

Tags :