Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பு மருந்தை பயன்படுத்த சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு

தடுப்பு மருந்தை பயன்படுத்த சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு

By: Nagaraj Sat, 26 Sept 2020 11:01:37 AM

தடுப்பு மருந்தை பயன்படுத்த சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு

உலக சுகாதார அமைப்பு ஆதரவு... ஆய்வுக்கூடங்களின் பரிசோதனைகள் இன்னும் முடிவுறாத நிலையிலும் சீனாவுக்கு கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஆதரவளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி அவசரகால திட்டத்தைதத் தொடங்கி உலக சுகாதார அமைப்புடன் தொடர்பு கொண்டு அதன் ஒப்புதலைப் பெற்றதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் தடுப்பு மருந்து முழுவதுமாக மனிதர்களுக்குப் பரிசோதிக்கப்படாமல், ஆய்வுக்கூடத்தின் மூன்றாம் கட்ட தரப் பரிசோதனைகளை நிறைவு செய்யாமல் புழக்கத்தில் விடப்படுவதால் பலநூற்றுக்கணக்கான அடிப்படை ஊழியர்கள் மிகவும் அபாயகர நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

emergency plan,world health organization,china,completed ,அவசர கால திட்டம், உலக சுகாதார அமைப்பு, சீனா, நிறைவு

ஆனால் இது தற்காலிகத் தீர்வுதான் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஜெனிவாவில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத் தீர்வு ஆய்வுக்கூடத்தில் மூன்றாம் கட்டப் பரிசோதனையை நிறைவு செய்வதில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா இது வரை அவசர கால திட்டம் குறித்த மருந்தின் விவரங்களை வெளியிடவில்லை.

Tags :
|