Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

By: Karunakaran Sun, 08 Nov 2020 10:34:11 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்பை தோற்கடித்து, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ள நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதே வேளையில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார். இவர்களது இந்த வெற்றிக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பதிவில், ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், கமலா ஹாரிஸின் வரலாற்று சாதனைக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவும், கனடாவும் நெருங்கிய நண்பர்கள், உங்கள் இருவருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

world leaders,joe biden,kamala harris,us presidential election ,உலகத் தலைவர்கள், ஜோ பிடன், கமலா ஹாரிஸ், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் ஆவதற்கான அத்தனை தகுதிகளையும் ஜோ பைடன் கொண்டுள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோரை வாழ்த்துவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த வெற்றி என்பது வரலாற்றை உருவாக்கும் டிக்கெட், டிரம்பை நிராகரித்தல் மற்றும் அமெரிக்காவிற்கான ஒரு புதிய பக்கம் என்று கூறியுள்ளார்.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், நார்வே அரசாங்கத்தின் சார்பாக, ஜோ பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஜோ பைடென் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையின் கீழ் அமெரிக்காவுடனான எங்கள் ஒத்துழைப்பை வளர்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், வாழ்த்துக்கள் ஜோ பைடன், துணை அதிபராக இருந்த போது இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, க்ரீஸ், பெல்ஜியம் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags :