Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் - நாசா ஆய்வு

2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் - நாசா ஆய்வு

By: Karunakaran Tue, 22 Sept 2020 2:42:26 PM

2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் - நாசா ஆய்வு

கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றத்தால் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலக கடல் மட்ட உயர்வுகளில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.

கிரிலாந்தில் 2000-ம் ஆண்டு முதல் 2100-ம் ஆண்டுக்குள் இடையில் உலக கடல் மட்ட உயர்வு 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு இருக்கும் என்றும், அண்டார்டிகாவில் 3 முதல் 28 சென்டி மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப மயமாதலால் காற்று வெப்ப நிலையுடன் பனிக்கட்டிகளின் மேற்பரப்பு உருகும் மற்றும் கடும் வெப்ப நிலை வெப்ப மயமாக்குவதால் கடலில் பனிப்பாறைகள் உருகுகின்றன.

world,sea leve,2100,nasa ,உலகம், கடல் மட்டம், 2100, நாசா

கிரிலாந்தின் பனிக்கட்டிகள் கடல் மட்ட உயர்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். மேலும் மேற்கில் சூடான கடல் நீரோட்டங்கள் பெரிதாக மிதக்கும் பனிக்கட்டிகளின் அடிப்பகுதியை அழிக்கின்றன. இதனால் நீர் இழப்பு ஏற்படுகிறது. கிழக்கு அண்டார்டிகா கடல் அடர்ந்த பனிக்கட்டிகளை பெறக்கூடும். ஏனெனில் வெப்ப நிலை அதிகரித்து பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது.

அண்டார்டிகா பனிக்கட்டிகளில் இருந்து பனி இழப்பை கணிப்பது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் பல்லோ பல்கலைக்கழகத்தின் திட்ட தலைவர் நோவிக்கி கூறுகையில், பனிக்கட்டிகள் எவ்வளவு உருகும் என்பதை பொறுத்துதான் எதிர் காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரும் என்பது தெரியவரும் என்று கூறினார்.

Tags :
|
|