Advertisement

உலக அளவில் கொரோனாவால் 1.13 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Sun, 05 July 2020 12:01:50 PM

உலக அளவில் கொரோனாவால் 1.13 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் தினமும் உலக அளவில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 1,13,72,004 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

மேலும் உலகளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,33,942 உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,32,861 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

worldwide,corona,impact,uk,spain ,உலக அளவு, கொரோனா, பாதிப்பு, இங்கிலாந்து, ஸ்பெயின்

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உலக பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4ல் ஒரு பங்கு உள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 29,35,770 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132,318ஆக உயர்வு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 45,182 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673,904 என்பதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,279 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரேசிலில் 1,578,376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் 674,515 பேர், இங்கிலாந்தில் 284,900, ஸ்பெயினில் 297,625, பெரு நாட்டில் 299,080, சிலி நாட்டில் 291,847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|