Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் இதுவரை கொரோனா பாதுகாப்பிலிருந்து 51.27 கோடிபேர் மீண்டுள்ளன

உலகளவில் இதுவரை கொரோனா பாதுகாப்பிலிருந்து 51.27 கோடிபேர் மீண்டுள்ளன

By: vaithegi Sun, 12 June 2022 12:23:18 PM

உலகளவில்  இதுவரை கொரோனா பாதுகாப்பிலிருந்து 51.27 கோடிபேர் மீண்டுள்ளன

உலகம் முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் இருந்து வருகின்றன. சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவ்வைரஸ் உலகம் முமுவதும் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

vaccinated,virus infected. omicron ,தடுப்பூசி,வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள். ஒமைக்ரான்

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 1 லட்சத்து 36 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 331 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 30 ஆயிரத்து 785 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Tags :