Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைத் தாண்டியது

By: Monisha Thu, 25 June 2020 2:01:07 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைத் தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாது உலக நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 95 லட்சத்து 43 ஆயிரத்து 028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.83 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

worldwide,coronavirus virus,infection,usa,india ,உலகம் முழுவதும்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,அமெரிக்கா,இந்தியா

அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் பாதிப்பு நிலவரம்:-
அமெரிக்கா - 2,462,708
பிரேசில் - 1,192,474
ரஷ்யா - 613,994
இந்தியா - 474,272
இங்கிலாந்து - 306,862
ஸ்பெயின் - 294,166
பெரு - 264,689
சிலி - 254,416
இத்தாலி - 239,410
ஈரான் - 212,501

Tags :
|