Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 526 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 526 பேர் பலி

By: Monisha Mon, 22 June 2020 10:58:33 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 526 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

world,coronavirus,china,vaccine,usa ,உலகம்,கொரோனா வைரஸ்,சீனா,தடுப்பூசி,அமெரிக்கா

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 90 ஆயிரத்து 31 ஆயிரத்து 789 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 47 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 69 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த முதல் 5 நாடுகள்:-
அமெரிக்கா - 1,22,238
பிரேசில் - 50,608
இங்கிலாந்து - 42,632
இத்தாலி - 34,634
பிரான்ஸ் - 29,640

Tags :
|
|