Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.08 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.08 லட்சமாக அதிகரிப்பு

By: Karunakaran Tue, 09 June 2020 1:21:31 PM

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.08 லட்சமாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 71,89,861 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,08,240 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,30,766 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 19,037 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 20,26,486 ஆக உயர்ந்துள்ளது.

corona,united states,brazil,russia ,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,பிரேசில் ,ரஷ்யா

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 586 பேர் பலியாகினர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,13,055 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. ஒரே நாளில் 18,925 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 7,10,887 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ரஷ்யாவில் 4,76,658 பேருக்கும் , ஸ்பெயினில் 2,88,797 பேருக்கும் , பிரிட்டனில் 2,87,399 பேருக்கும், இத்தாலியில் 2,35,278 பேருக்கும், ஜெர்மனியில் 1,86,205 பேருக்கும் , பெருவில் 1,99,696 பேருக்கும் , துருக்கியில் 1,71,121 பேருக்கும் , ஈரானில் 1,73,832 பேருக்கும் , பிரான்ஸில் 1,54,188 பேருக்கும், சீனாவில் 83,040 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|