Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 63.57 லட்சம் பேர் இறப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 63.57 லட்சம் பேர் இறப்பு

By: vaithegi Fri, 01 July 2022 12:22:40 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 63.57 லட்சம் பேர் இறப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதை செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இருப்பினும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் உயிரிழப்புகள் பல தொடர்ந்த வண்ணம் உள்ளது . இதுவரை கொரோனாவால் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.57 லட்சத்தை தாண்டி உள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,357,483 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் 552,433,598 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 527,679,187 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 36,834 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona,death ,கொரோனா ,இறப்பு

தற்போது உயிரிழப்புகளை தடுக்க மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்த பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் அதன் தாக்கம் குறைவாகத்தான் இருக்கிறது.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டாலும் உயிருக்கு எந்தவித ஆபத்து நேராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது என கூறுகின்றனர்.

Tags :
|