Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் சில நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு ..சுகாதாரத்துறை எச்சரிப்பு

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் சில நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு ..சுகாதாரத்துறை எச்சரிப்பு

By: vaithegi Fri, 24 June 2022 7:32:49 PM

உலகளவில் குரங்கு அம்மை நோய்  பரவல் சில நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு ..சுகாதாரத்துறை எச்சரிப்பு

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. தற்போது வரைக்கும் 58 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது.

உலகளவில் பார்க்கையில் 3,417க்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெகு விரைவாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை நோயை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் எனவும், இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

department of health,monkey measles ,சுகாதாரத்துறை ,குரங்கு அம்மை நோய்

உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோயை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் மிகவும் வேகமாக பரவி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு சமூக பரவல் எங்கு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோயால் கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலே அலட்சியமாக இல்லாமல் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளர்ப்பு பிராணிகளுக்கு கூட குரங்கு அம்மை நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags :