Advertisement

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 2.13 கோடியை கடந்தது

By: Nagaraj Sat, 15 Aug 2020 5:08:25 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 2.13 கோடியை கடந்தது

கொரோனா பாதிப்பு 2.13 கோடியை கடந்தது... உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,13,57,890 கோடியை கடந்தது.

உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி, புதிதாக 12,619 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,13,57,890 கோடியைக் கடந்தது.

அமெரிக்காவில் 54,76,266 பேரும், பிரேஸிலில் 32,78,895 பேரும், ரஷியாவில் 9,12,823 பேரும், தென்னாப்பிரிக்காவில் 5,79,140 பேரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

infection,corona,worldwide,healed ,நோய் தொற்று, கொரோனா, உலகம் முழுவதும், குணமடைந்தோர்

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 723 உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனா தொற்று உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,63,387-ஆக இருந்தது. இதுவரை அமெரிக்காவில் 1,71,535 பேரும், பிரேஸிலில் 1,06,571 பேரும், மெக்ஸிகோவில் 55,908 பேரும், இந்தியாவில் 49,148 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,41,51,766ஆகவும், 64,42,737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 64,559 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags :
|