Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது

By: Karunakaran Fri, 31 July 2020 11:51:51 AM

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.74 கோடியைக் கடந்துள்ளது.

இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து 1.09 கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். மேலும் கொரோனா காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 6.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

world,corona virus,corona death,corona prevalence ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு, ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி போன்ற பல மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர போட்டியில் உள்ளன.

Tags :
|