Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Thu, 13 Aug 2020 11:23:21 AM

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தை கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

world,death toll,corona virus,corona prevalence ,உலகம், இறப்பு எண்ணிக்கை, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.36 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கொரோனா அதிகம் பாதித்த அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா , ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|