Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Thu, 06 Aug 2020 11:55:30 AM

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், இதன் தாக்கம் குறைந்த பாடில்லை.

தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

world,death toll,corona virus,corona prevalence ,உலகம், இறப்பு எண்ணிக்கை, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|