Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Sat, 08 Aug 2020 2:24:30 PM

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா அதிகம் பாதிப்புள்ள அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

world,corona virus,corona death,corona prevalence ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இருப்பினும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 959 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|