Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Fri, 14 Aug 2020 1:31:29 PM

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிதல் முக்கிய ஒன்றாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

world,death toll,corona virus,corona death ,உலகம், இறப்பு எண்ணிக்கை, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாவில் இருந்து 1 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா காரணமாக 1,70,378 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|