Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.62 லட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.62 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Sat, 15 Aug 2020 12:59:48 PM

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.62 லட்சத்தைக் கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.13 கோடியைக் கடந்துள்ளது. மேலும், 7.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

world,death toll,corona virus,corona death ,உலகம், இறப்பு எண்ணிக்கை, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

உலகம் முழுவதும் இதுவரை 1.41 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணடமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.62 லட்சத்தைக் கடந்துள்ளது.உலகம் முழுவதும் தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையால் பலர் குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது .


Tags :
|