Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Tue, 04 Aug 2020 11:51:15 AM

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் 1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. கொரோனா பாதிப்புடைய 60 லட்சத்து 72 ஆயிரத்து 489 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

world,death toll,corona virus,7 million ,உலகம், இறப்பு எண்ணிக்கை, கொரோனா வைரஸ், 7 மில்லியன்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 732 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,58,912 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். பிரேசில், மெக்சிக, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|