Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 74.46 லட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 74.46 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Thu, 11 June 2020 11:39:16 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 74.46 லட்சத்தைக் கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 74.46 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

worldwide,corona,china,america,coronation ,கொரோனா,கொரோனா பாதிப்பு,சீனா,அமெரிக்கா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 37.28 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தற்போது அமெரிக்காவில் இனவெறிக்கெதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Tags :
|
|