Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் 4 லட்சத்தை கடந்தது கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை

உலக அளவில் 4 லட்சத்தை கடந்தது கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை

By: Nagaraj Tue, 09 June 2020 12:08:36 PM

உலக அளவில் 4 லட்சத்தை கடந்தது கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 71,89,861 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,08,240 ஆக அதிகரித்துள்ளது.

corona,impact,world size,number of casualties,4 lakhs ,
கொரோனா, பாதிப்பு, உலக அளவு, பலி எண்ணிக்கை, 4 லட்சம்

இந்நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,30,766 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 19,037 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 20,26,486 ஆக உயர்ந்தது. மேலும் இங்கு ஒரே நாளில் 586 பேர் பலியாகினார். இதனால் பலி எண்ணிக்கை 1,13,055 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 18,925 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 7,10,887 ஆக அதிகரித்தது. ரஷ்யாவில் 4,76,658, ஸ்பெயினில் 2,88,797, பிரிட்டனில் 2,87,399 பேருக்கும், இத்தாலியில் 2,35,278, ஜெர்மனியில் 1,86,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் பெருவில் 1,99,696, துருக்கியில் 1,71,121, ஈரானில் 1,73,832, பிரான்ஸ் 1,54,188, சீனாவில் 83,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தினமும் உயர்ந்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்புகளால் உலக நாடுகளின் பொருளாதாரமும் சரிவடைந்து வருகிறது.

Tags :
|
|