Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Tue, 16 June 2020 1:01:52 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகில் உள்ள பல நாடுகள் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களிள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

coronavirus,worldwide,america,vaccine , கொரோனா பாதிப்பு,உலகம் ,தடுப்பூசி,அமெரிக்கா

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து 73 ஆயிரத்து 626 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 57 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 78 ஆயிரத்து 877 பேர் குணமடைந்துள்ளனர்.

இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 37 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த வாரம் முதல் அங்கு கொரோனாவால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.



Tags :