Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Fri, 19 June 2020 11:27:56 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 85 லட்சத்து 60 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

worldwide,coronavirus,america,brazil , கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ்,அமெரிக்கா, பிரேசில்

தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 36 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 45 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் பிரேசில் நாடு உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். கடந்த வாரத்திலிருந்தே கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக தீவிரமடைந்து வருகிறது




Tags :