Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Mon, 22 June 2020 10:58:34 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்துள்ளது. உலகளவில் 90 லட்சத்து 30 ஆயிரத்து 547 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

worldwide,coronavirus,corona death,america ,கொரோனா பாதிப்பு,உலகம்,அமெரிக்கா

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 37 லட்சத்து 65 ஆயிரத்து 880 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 47 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் இதுவரை 4 லட்சத்து 69 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 23,53,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 10,84,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் உள்ள ரஷியாவில் 5,84,680 பேருக்கும், இந்தியாவில் 4,10,461 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :