Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Wed, 24 June 2020 10:54:06 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உலகின் 213 நாடுககளுக்கு பரவி மக்களை அச்சுறுத்து வருகிறது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 92 லட்சத்து 52 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

worldwide,corona virus,corona death,america ,உலகம்,கொரோனா பாதிப்பு,கொரோனா வைரஸ்,அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 38 லட்சத்து 31 ஆயிரத்து 731 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இதில் 57 ஆயிரத்து 911 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 50 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக உலகளவில் இதுவரை 4 லட்சத்து 79 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

Tags :