Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரிப்பு

By: Karunakaran Tue, 07 July 2020 10:40:06 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

world,coronavirus,corona casualties,corona pervalence ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா விபத்துக்கள், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 169 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 45 லட்சத்து 9 ஆயிரத்து 319 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 777 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 66 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா காரணமாக இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

Tags :
|