Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரிப்பு

By: Karunakaran Fri, 21 Aug 2020 6:02:29 PM

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவுயுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.55 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.96 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

world,corona infection,corona virus,corona death ,உலகம், கொரோனா தொற்று, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 57.45 லட்சம், பிரேசிலில் 35.05 லட்சம், ரஷ்யாவில் 9.42 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா காரணமாக அமெரிக்காவில் 1.77 லட்சம், பிரேசிலில் 1.12 லட்சம், ரஷ்யாவில் 16,099 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.96 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|