Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்தது

By: Karunakaran Sun, 12 July 2020 10:23:58 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 74.77 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

world,coronavirus,corona prevalence,corona death ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 5.67 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோன அதிகம் பாதித்த நாடாக பிரேசில் உள்ளது.

பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே கொரோனா அதிகம் பரவ முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags :
|