Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5.12 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5.12 கோடியாக அதிகரிப்பு

By: Nagaraj Tue, 10 Nov 2020 09:09:15 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5.12 கோடியாக அதிகரிப்பு

5.12 கோடியாக அதிகரித்தது... உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.12 கோடியாக அதிகரித்துள்ளது

உலகம் முழுவதும் 51,238,677 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,269,113 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 36,051,332 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 13,918,232 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

corona,world,vulnerability,increase,heal ,கொரோனா, உலகம், பாதிப்பு, அதிகரிப்பு, குணமானோர்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,21,956 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 2,44,448 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,552,610என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,591,075 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 244,448 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,552,610 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,675,766 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 162,638 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,064,344 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|