Advertisement

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.96 கோடியாக உயர்வு

By: Karunakaran Sat, 07 Nov 2020 08:32:40 AM

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.96 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.96 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.52 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

world,corona virus,america,china ,உலகம், கொரோனா வைரஸ், அமெரிக்கா, சீனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவியவர்களில் 13.15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|