Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Tue, 14 July 2020 11:28:22 AM

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்கியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

corona victim,world,corona virus,corona prevalence ,கொரோனா  பலி, உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 76.91 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக பிரேசில் அதிபர் உள்பட பல நாட்டு தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags :
|