Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியது

By: Karunakaran Mon, 15 June 2020 1:07:41 PM

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 215 நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4.35 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து 40 லட்சத்து 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

corona death,coronavirus,china,america ,கொரோனா பலி,கொரோனா வைரஸ்,சீனா,அமெரிக்கா

உலகளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பொருளாதார வீழ்ச்சி காரணமாக தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதனால் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் அங்கு மீண்டும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பதற்றமடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

Tags :
|