Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியது

By: Karunakaran Wed, 10 June 2020 12:23:26 PM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் உள்ள இறைச்சி சந்தியில் தான் கொரோனா வைரஸ் முதன்முதலாக தோன்றியது. முதலில் சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 73.12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

worldwide,coronavirus,america,corona infection ,அமெரிக்கா,கொரோனா,சீனா,வுகான், மனித இழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை நெருங்கியுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் நாடும் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் நடத்தப்படுவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதேபோல் மற்ற நாடுகளிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்.

Tags :